இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதற்குக் காரணம் டெல்டா வைரஸ் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த இரு தினங்களாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலுக்கு இங்கு புதிதாகப் பரவி வரும் டெல்டா வைரஸே காரணம். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இஸ்ரேலில் உள் அரங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலில் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பலியாகி உள்ளனர்.
டெல்டா வைரஸ் அதிக தொற்றுத் தன்மை கொண்டதாக உள்ளது. டெல்டா வைரஸ் பரவுதலில் இதே நிலை தொடர்ந்தால் உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், டெல்டா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்டா வைரஸ் இதுவரை 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago