பறவை குண்டு மூலம் விமானங்களை தகர்க்க ஐ.எஸ். நூதன சதித் திட்டம்

By ஏஎன்ஐ

பறவைகளை தற்கொலைக் குண்டாகப் பயன்படுத்தி விமானங்களை தகர்க்க ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராக், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது அமெரிக்க கூட்டுப் படைகள், ரஷ்ய விமானப் படை வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதை எதிர்கொள்ள பறவைகளை தற்கொலைப் படையாக பயன்படுத்தி விமானங்களை தகர்க்க ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களில் இருந்து பருந்து, புறாக்கள் உள்ளிட்ட பறவைகளை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அந்தப் பறவைகளை விமானங்கள் மீது மோதச் செய்ய சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது கோழிகளின் உடலில் வெடிகுண்டை கட்டி, அரசு கட்டுப்பாட்டு பகுதிகளில் வெடிக்கச் செய்கின்றனர். இதே முறையைப் பின்பற்றி விமானங்களையும் தகர்ப்போம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர், சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். அதில் வெடிகுண்டு கட்டப்பட்ட ஒரு காகம் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்படுகிறது.

இதையடுத்து இராக்கில் தங்கியுள்ள அமெரிக்க கூட்டுப் படைகளும் சிரியாவில் முகாமிட்டுள்ள ரஷ்ய விமானப் படையும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்