ஐ.எஸ்.அமைப்புடன் எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் உள்ளதாக தங்கள் மீது ரஷ்யா குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் அளிக்க வேண்டும் என்று துருக்கி சவால் விடுத்துள்ளது.
துருக்கி - சிரிய நாட்டு எல்லையில், ரஷ்யாவின் விமானத்தை துருக்கி ராணுவத்தினர் தாக்கி அழித்தனர். இதன் பின்னணியில், ஐ.எஸ். அமைப்புடன் துருக்கி மேற்கொண்டுள்ள எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் உள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இந்த புகாருக்கு உரிய ஆதாரங்களை ஒப்படைக்க தயாரா என்று ரஷ்யாவுக்கு துருக்கி சவால் விடுத்துள்ளது.
"ஏதேனும் குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கான ஆதாரம் இருக்க வேண்டும்" என்று துருக்கி அதிபர் ரிகாப் தயாயிப் எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது. மோதல் போக்கு காரணமாக ஐ.நா. உச்சி மாநாட்டில் துருக்கி அதிபரை சந்திக்க ரஷ்ய அதிபர் புடின் மறுத்து விட்டார்.
ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று துருக்கி அரசுக்கு புடின் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
18 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago