90 வயது ஜிம் பயிற்சியாளர்!

By எஸ். சுஜாதா

90 வயதில் பெரும்பாலானவர்களால் நடக்கக்கூட முடியாது. ஆனால், 90 வயதில் ஜிம் பயிற்சியாளராகக் கலக்கிவருகிறார் டாக்கிஷிமா மீகா. தினமும் பல மணி நேரம் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்றிருக்கும் இவர், ஜப்பானின் மிக வயதான ஜிம் பயிற்சியாளராகப் புகழ்பெற்றுள்ளார்.

கடந்த ஜனவரியில் 90-வது பிறந்த நாளைக் கொண்டாடிய டாக்கிஷிமாவைப் பார்த்தால் 60 வயது என்றுகூடச் சொல்ல முடியாது. 20 வயது இளைஞர்கள்கூட இவரைப் போலச் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. கட்டுக்கோப்பான உடல், நேர்மறையான சிந்தனை, முகம் முழுக்கப் புன்னகையோடு இருப்பதால் தனக்கு இந்த இளமையான தோற்றம் சாத்தியமாகியிருப்பதாகச் சொல்கிறார் இவர்.

டாக்கிஷிமாவுக்குத் தன் உடல் மீது 65 வயதில்தான் அக்கறை ஏற்பட்டது. அப்போது இவரது உடல் எடை அதிகமாக இருந்தது. சாதாரணமான உடற்பயிற்சிகளில்கூட அவருக்கு நாட்டமில்லை.

“வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யாமல் இருந்தேன். உடற்பயிற்சி நிலையத்துக்குப் போவது பற்றிய சிந்தனை எல்லாம் எனக்கு இருந்ததேயில்லை. நான் எடை அதிகமாக இருந்தது என் கணவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், நான் எடை அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளாமலே இருந்தேன். இறுதியில் அவர் சொன்ன வார்த்தைகள் என்னை, உடற்பயிற்சி நிலையைத்தை நோக்கி ஓட வைத்துவிட்டன. 5 ஆண்டுகளுக்குப் பிறகு 15 கிலோ எடை குறைந்திருந்தேன். ஆனாலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்துகொண்டேயிருந்தேன். ஏனென்றால் இப்போது எனக்கு உடற்பயிற்சியின் மீது தீராக் காதல் ஏற்பட்டுவிட்டது. ஆண்டுக்கணக்கில் முதுமையை எட்டிவிட்டாலும் பார்ப்பதற்கு இளமையாகவே தெரிகிறேன்” என்கிறார் டாக்கிஷிமா.

பொதுவான உடற்பயிற்சிகளை மேற்கொண்டவர், பிறகு கால்களை வலிமையாக்குவதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். அடுத்து பரந்த தோள்களை உடற்பயிற்சிகளின் மூலம் பெற்றார். அதற்குப் பிறகு குறுகிய எடைக்கான பயிற்சிகளை மேற்கொண்டு, அதையும் அடைந்துவிட்டார். இப்போது உடல் அவர் சொல்வதை எல்லாம் கேட்கும் நிலைக்கு வந்துவிட்டது.

தினமும் இரவு 11 மணிக்குத் தூங்கச் செல்கிறார். 4 மணி நேரம் மட்டுமே தூக்கம். அதிகாலை 3 மணிக்கு எழுந்துவிடுவார். 4 கி.மீ. தூரம் நடப்பார். 3 கி.மீ. தூரம் மெதுவாக ஓடுவார். 1 கி.மீ. தூரத்துக்குப் பின்னோக்கி நடப்பார். சமச்சீரான, எளிய காலை உணவைச் சாப்பிடுவார். சிறிது நேரம் வீட்டு வேலைகளில் மூழ்குவார். தொலைக்காட்சி நிகழச்சிகளைப் பார்ப்பார். உணவு அதிகம் சாப்பிட்டால் தூக்கம் வரும் என்பதால், குறைவான அளவில் மதிய உணவு. மாலை தீவிரமான உடற்பயிற்சி. இரவில் பிடித்த உணவு. இவைதான் டாக்கிஷிமாவின் அன்றாட நடவடிக்கைகள்.

“79 வயதில்தான் என்னுடைய ஜிம்மில் சேர்ந்தார் டாக்கிஷிமா. 8 ஆண்டுகளில் ஒரு பயிற்சியாளருக்குரிய அனைத்து விஷயங்களையும் கற்றுத் தேர்ந்துவிட்டார். இவ்வளவு திறமையானவரை ஒரு மாணவியாக வைத்துக்கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. அவரைப் பயிற்சியாளராக மாற்றினேன். டாக்கிஷிமா அதை ஏற்றுக்கொள்ளவேயில்லை. கட்டாயப்படுத்தி, 87 வயதில் பயிற்சியாளராக மாறினார். அவர் பயிற்சி செய்வதும் கற்றுக்கொடுப்பதும் அவ்வளவு ரசனையாக இருக்கும். இனிமையாகப் பேசுவார். அவரின் புன்னகையும் நேர்மறையான பேச்சுகளும் எல்லோரையும் கவர்ந்துவிடும். மிகவும் அன்பானவர்” என்று புகழ்கிறார் ஜிம் உரிமையாளரான நாகாசாவா.

கோவிட் பெருந்தொற்று காரணமாக ஜிம்மை வாரம் முழுவதும் நடத்த இயலவில்லை. அதனால், வாரம் ஒரு முறைதான் இப்போது வகுப்பெடுக்கிறார் டாக்கிஷிமா. மீதி நேரத்தில் தன் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துகிறார்.

ஜப்பானில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நூறு வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலரும் டாக்கிஷிமாவைப் பார்த்து உத்வேகம் கொண்டு, உடற்பயிற்சிகளில் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்