ரஷ்யாவில் ஒரே நாளில் 14,185 பேர் கரோனாவால் பாதிப்பு

By செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,185 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,185 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,36,593 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கரோனா பலி எண்ணிக்கை ரஷ்யாவில் 1,27,180 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில்தான் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக தீவிரமாக உள்ளது. மாஸ்கோவில் நேற்று மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யா ஆறாவது இடத்தில் உள்ளது. கரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்திவருவதே கரோனா பரவலுக்குக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 3.2 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வெளிநாட்டவரும் ரஷ்யாவில் வந்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அதிபர் புதின் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் அறிவித்தார். மேலும், கரோனா தடுப்பூசிகள் குறித்து அச்சம்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன. ஸ்புட்னிக் கரோனாவுக்கு எதிராக 91.6% சிறப்பாகச் செயலாற்றக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்