ரஷ்ய செயற்கைக்கோள் மாயம்

By ஏஎஃப்பி

ரஷ்ய விண்வெளி நிறுவனம் அனுப்பிய செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டை இழந்து மாயமாகி உள்ளது.

ரஷ்யாவின் மிர்னி நகரில் இருந்து கடந்த 5-ம் தேதி சோயூஸ் ராக்கெட் மூலம் ராணுவ உபயோகத்துக்காக அதிநவீன செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த செயற்கைக்கோள் ஏவுகணையில் இருந்து பிரிந்த பிறகு கட்டுப்பாட்டை இழந்து மாயமானது. இதனால் செயற்கைக்கோள் திட்டம் தோல்வி அடைந்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், கடலில் நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டத்தை கண் காணிப்பதற்காக அதிநவீன செயற்கைக்கோள் விண் ணில் செலுத்தப்பட்டது, ஆனால் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை இழந் திருப்பதால் அதற்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சர்வதேச விண்வெளி நிறுவனத்துக்கு தேவையான பொருட்களை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அல்டாஸ் வி ராக்கெட் மூலம் நேற்று முன்தினம் அனுப்பி வைத்தது.

தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் 6 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்