அடுத்த ஆண்டுக்குள் மக்கள் தொகையில் 70% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள கார்பில் பே பகுதியில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கலந்துகொண்டார்.
இதுகுறித்து கேப்ரியேசஸ் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “நம்மிடம் உள்ள சவால் இந்த கரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பது மட்டுமே என்று ஜி-7 நாடுகளின் தலைவர்களிடம் கூறினேன்.
அடுத்த முறை ஜி-7 நாடுகளின் கூட்டம் ஜெர்மனியில் நடைபெறும்போது உலக மக்கள்தொகையில் 70% மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றார்.
» ரூ.100-ஐத் தொட்ட பெட்ரோல் விலை; மத்திய, மாநில அரசுகள் வரிகளைக் குறைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
» 27 மாவட்டங்களில் டீக்கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி: இ-சேவை மையங்களுக்கும் அனுமதி
ஏழை நாடுகளுக்குப் பிற நாடுகள் கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக 10% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முடியும் என்று டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் அதிகப்படியாக கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ளன. இவ்வாறு இருக்க, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தடுப்பூசிகள் சென்றடைவதில் சமநிலையின்மை நிலவுவதாகப் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
12 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago