மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் மூவர் பலி

By செய்திப்பிரிவு

மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று பாலஸ்தீனர்கள் பலியாகினர்.

இதுகுறித்து பாலஸ்தீனத்தின அரசு தரப்பில், “ பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரி இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பலியானவர்கள் பாலஸ்தீன பாதுகாப்புப் படையை சேந்தவர் இருவர் அடக்கம். இஸ்ரேல் நடத்தியது ஆபத்தான தாக்குதல்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்தின.

மே 10-ம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மற்றும் மேற்குக் கரை பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் 200க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

11 days ago

மேலும்