பிரான்ஸ் அதிபர் மக்ரோனைப் பொதுவெளியில் ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் ஊடகங்கள் தரப்பில், “அதிபர் மக்ரோன், த்ரோம் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றைப் பார்வையிடச் சென்றிருந்தார். பள்ளியைப் பார்வையிட்டுத் திரும்பியபோது அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி மக்ரோன் கை குலுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த நபர், மக்ரோனின் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மக்ரோனின் பாதுகாவலர்கள் அவரை மீட்டுப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்” என்று செய்தி வெளியானது
மக்ரோனை அறைந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸில் கரோனா பாதிப்பு குறைந்து தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. பல்வேறு தளர்வுகளையும் அதிபர் மக்ரோன் அறிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக பிரான்ஸ் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் மக்ரோன். இந்த நிலையில் மக்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
6 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago