இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதார நிறுவனம் மையம் தரப்பில், “பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கிறோம். முதல் கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவாக்சின் தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி அளிக்கவில்லை. பல்வேறு சோதனை முடிவுகளைச் சமர்ப்பித்த பின்னர் தற்போது பிரேசில் அனுமதி அளித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிக்கும் பிரேசில் அனுமதி அளித்துள்ளது.
பிரேசிலில் தற்போதுவரை சுமார் 10 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மக்கள் தொகையில் 21% மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து கரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவது அதிகரிக்கப்பட்டு வருகிறது.
» ராமநாதபுர மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டுகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
» மீன் வியாபாரிகள் ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர்
உலக அளவில் கரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளன. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago