ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கரோனாவின் மூன்றாவது அலை பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கோ சுகாதாரத் துறை அமைச்சர் ஜின் கூறும்போது, “ காங்கோவில் கரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். அதிக மக்கள் தொகை கொண்ட தலைநகர் கின்ஷாசாவில் கரோனா அதிகம் பரவி வருகிறது.
தற்போது கின்ஷாசா கரோனாவின் மையமாக உள்ளது. கரோனா தடுப்பூசிகளை குறைவாக செலுத்தி வருவது, கரோனா விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாமல் இருப்பதே கரோனா பரவலுக்கு காரணமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 183 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார். காங்கோவில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
» முதல்வர் ஸ்டாலின் பண்பைக்கண்டு நெகிழ்ந்து போனேன்: சீமான் பேட்டி
» பொறியியல் செமஸ்டர் தேர்வுகள்: அண்ணா பல்கலை. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது
ஆப்பிரிக்க கண்டத்தில் இதுவரை 43 லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன”
ஆப்பிரிக்காவில் இதுவரை 1.7% மக்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago