இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து துருக்கி விமான விமானத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, நேபாளம, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர். மேலும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு முன்னர் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
இந்த எட்டு நாடுகளை தவிர பிற நாட்டினர் 14 நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு துருக்கிக்குள் வரலாம்.அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக மாட்டர்கள். மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமாகி இருந்தாலும் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளதைத் தொடர்ந்து அந்நாடுகள் மீது ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
துருக்கியை பொறுத்தவரை அங்கு 52 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
துருக்கியில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அங்கு தடுப்பூசி செலுத்துவதை எர்டோகன் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago