பிரேசிலில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்.
இதுகுறித்து பிரேசில் உள்ளூர் ஊடகங்கள், “பிரேசிலின் வடகிழக்குப் பகுதியான அரகாஜுவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அம்மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி நான்கு பேர் பலியாகினர். 35க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மேலும், அம்மருத்துவமனையில் முக்கிய சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
பெரும் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளில் பிரேசிலும் ஒன்று. பிரேசிலில் 1.6 கோடி பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
» ஓடிடியில் வெளியாகிறது 'வாழ்'?
» 5.80 லட்சம் டெலிபோன் அழைப்புகளுக்கு மருத்துவ, மனநல ஆலோசனை: ஆணையர் ககன்தீப் சிங் தகவல்
உலக அளவில் கரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் , பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 34 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago