12 - 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி: ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

By செய்திப்பிரிவு

12 - 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியைப் பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியனின் மருத்துவ அமைப்புத் தலைவர் மார்கோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “தடுப்பூசி செலுத்துவதால் 12 -15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே பைஸர் கரோனா தடுப்பூசியை 12 - 15 வயதினருக்குச் செலுத்த நாங்கள் அனுமதி அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த மாதத் தொடக்கத்தில், அமெரிக்காவின் மத்திய நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, பைஸர் நிறுவனத் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுள்ள பிரிவினருக்குப் பயன்படுத்த அனுமதி அளித்தது. அதே போல் கனடாவும் அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

3 days ago

மேலும்