சிரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பஷார் அல் ஆசாத்துக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கும், சிரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிரிய மக்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சிரியாவில் கடந்த 26ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் ஆசாத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சரும், சோசலிச யூனியனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான அப்துல்லா சலிம் போட்டியிட்டார்.
இந்த நிலையில் சிரிய அதிபர் தேர்தலில் பஷார் அல் ஆசாத் 95.1% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்தல் முடிவுகளை எதிர்க் கட்சிகள் ஏற்கவில்லை.
இத்தேர்தல் முடிவு நியாயமற்றது என்று அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளன. போரினால் புலம்பெயர்ந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
சிரியாவின் அதிபராகத் தொடர்ந்து நான்காவது முறையாக பஷார் அல் ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago