வெனிசூலா நாடாளுமன்றத் தேர்த லில் எதிர்க்கட்சியான ஜனநாயக ஒற்றுமை இயக்கம் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
தென்அமெரிக்க நாடான வெனிசூலாவில் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற்றது. இதில் ஆளும் ஐக்கிய சோஷலிச கட்சிக்கும் எதிர்க் கட்சியான ஜனநாயக ஒற்றுமை இயக்கம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
தேர்தலில் பதிவான வாக் குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 167 தொகுதி களில் ஜனநாயக ஒற்றுமை இயக்கம் கட்சி 99 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் கட்சிக்கு 46 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கடந்த 17 ஆண்டுகளாக ஐக்கிய சோஷலிச கட்சி ஆட்சியில் உள்ளது.
தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. கலவர வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் லியோ போல்டோ லோபஸ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி லிலியன் தலைமையில் ஐனநாயக ஒற்றுமை இயக்கம் கட்சி தேர்த லில் போட்டியிட்டது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago