ஹாங்காங்கில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வோல்டோ மீட்டர் இணையதளம் வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் ஹாங்காங்கில் ஒருவர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இறப்பு பதிவு செய்யப்படவில்லை.
கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்க எண்ணிகளிலே ஹாங்காங்கில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.
» 'லிஃப்ட்' வெளியீடு: ரவீந்தர் சந்திரசேகரன் விளக்கம்
» 'அவர்களின் அப்பா வந்தால்கூட என்னை கைது செய்ய முடியாது': பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சைப் பேச்சு
ஹாங்காங்கில் இதுவரை 17% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
10 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago