தடுப்பூசிக்காக அமெரிக்காவுக்கு படையெடுக்கும் வெளிநாட்டு செல்வந்தர்கள்

By செய்திப்பிரிவு

"நான் அமெரிக்காவை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற கனவில் இங்கு வரவில்லை, தடுப்பூசியை எப்படியாவது போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா வந்துள்ளேன்" என்கிறார் பெருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.

அமெரிக்காவை சுற்றிப் பார்பதற்காக வந்தவர்கள் நிலை மாறி தற்போது அமெரிக்காவுக்கு தடுப்பூசி போடுவதற்காக பிற நாடுகளிலிருந்து மக்கள் வருகை தருகிறார்கள்.

லத்தின் அமெரிக்க நாடான பெரு, கரோனா அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நாடுகளுள் ஒன்று. இதன் காரணமாக பெருவில் உள்ள தொழிலதிபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொல்வதற்காக இந்த வருடம் தொடக்கம் முதலே அமெரிக்கவுக்கு பயணிக்க தொடங்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மே 18 ஆம் தேதிவரை பெருவைச் சேர்ந்த 70,000 பேர் தடுப்பூசி போடுவதற்காக வெளி நாடுகளுக்கு பயணித்துள்ளதாக பெருவின் துணை சுகாதாரத் துறை அமைச்சர் கஸ்டோவா சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

பெருவில் இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பலியாகி உள்ளனர். 7% பேருகு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பெரு மட்டும் மல்லாமல் பல்வேறு நாடுகளிலிருந்து வருபவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக அமெரிக்காவுக்கு வருகை புரிகின்றனர்.

உலக அளவில் தங்களது குடிமக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்திய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் அதிகப்படியாக கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ளன. இவ்வாறு இருக்க, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தடுப்பூசிகள் சென்றடைவதில் சமநிலையின்மை நிலவுவதாகப் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்