உலகம் முழுவதும் கரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வ எண்ணிக்கைவிட அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், “ அதிகாரப்பூர்வ எண்ணிக்கைப்படி உலகம் முழுவதும் கரோனாவினால் இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கரோனா பலி எண்ணிக்கை அதிகாரப்ப்பூர்வ எண்ணிக்கைவிட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்த நிலையில் 34, 59,294 பேர் பலியாகி உள்ளனர்.
கரோனா இரண்டாம், மூன்றாம் அலைகள் மிகத் தீவிரமாக பரவி வருகின்றன. இதன் காரணமாக இந்தியா, பிரேசிலில் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
» தீவிர ஊரடங்கில் எவை எவைக்கு அனுமதி?- தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரம்
» ஒருவார தீவிர ஊரடங்கு: இன்றும், நாளையும் தளர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
தடுப்பூசி செலுத்துவதில் பாரப்பட்சம்
தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.
இந்தநிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago