வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் நெருங்கிய உதவியாளர் கிம் யாங் கோன் கார் விபத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"தொழிலாளர் கட்சி செயலாளர் தோழர் கிம் யாங் கோன் (73) செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணிக்கு கார் விபத்தில் உயிரிழந்தார்" என்று வட கொரிய அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ எந்தவித கூடுதல் தகவலும் இல்லாமல் தெரிவித்துள்ளது.
கிம் ஜோங்கின் நெருங்கிய உதவியாளரும் அமைச்சரவையில் உயர்மட்ட அதிகாரியுமான கிம் யாங் கோன் (73) தென் கொரியாவுடனான அந்நாட்டின் உறவு தொடர்பில் முக்கிய நபராக திகழ்ந்தவர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வட கொரியா நடத்திய எல்லை தாக்குதலில் 2 தென் கொரிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பீரங்கி தாக்குதல் தொடங்கியது.
இவ்வளவு பிரச்சினை இருந்த போதிலும் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கச் செய்தவர் கிம் யாங் கோன். அவர் ஏற்படுத்திய பேச்சுவார்த்தையே 2015-ல் கொரிய நாடுகளுக்கு இடையே வெடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago