உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்கள் குழந்தைகளை தாக்குவதால் பள்ளிகள் மூடப்படுவதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில், “உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் காரணமாக வரும் புதன்கிழமை முதல் பள்ளிகள் இயங்காது. கல்லூரிகளுக்கும் இது பொருந்தும். ஆன்லைனில் பாடங்கள் நடத்த வலியுறுத்தப்படுகிறது. மே 28 ஆம் தேதிவரை பள்ளிகள் இயங்காது” என்றார்.
இதுகுறித்து கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறும்போது, “ சிலவகை உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் ஆபத்தானதாக உள்ளன. இவை குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றன. இதில் நமக்கு கவனம் தேவை” என்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிங்கப்பூரில் 49 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
» நீராவி நுகர்தல் கரோனா சிகிச்சைக்குக் கூடாது: தமிழக அரசின் அறிவிப்புக்கு டாக்டர்கள் சங்கம் வரவேற்பு
» முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சேமிப்புப் பணம் ரூ.2,060-ஐ வழங்கிய 9 வயதுச் சிறுவன்
இதுவரை சிங்கப்பூரில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது.
வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.
இந்த நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago