நீண்ட நேரம் பணி செய்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் காலநிலை மாற்றம் மற்றும் மருத்துவ இயக்குனர் மரியா நெய்ரா கூறும்போது, “வாரத்திற்கு 55 மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதில் தெற்காசிய நாடுகள், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் மக்கள் அதிக பாதிப்பைச் சந்திக்கிறார்கள். 194 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் வாரத்திற்கு 55 மணி நேரங்களுக்கு மேலாகப் பணி புரிபவர்கள் 35% பக்கவாதத்தால் பாதிக்கப்படவும்,17% இதயப் பிரச்சனையால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே நாம் பணியாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை அளிக்க வேண்டிய சூழலில் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு 2000-2016 காலகட்டத்தை உள்ளடக்கியது. இருப்பினும் கரோனா காலத்திலும் மக்களின் வேலை நேரம் கூடுதலாகியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
» பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; இந்த வார நட்சத்திர பலன்கள் - (மே-17 முதல் 23ம் தேதி வரை)
மேலும், பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை நேரங்களை அதிகரிக்காமல் இருப்பதே சிறந்தது என்று உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி பிரான் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago