இந்தியா பாகிஸ்தான் இடையே தடைப்பட்ட அமைதி பேச்சுவார்த் தையை மீண்டும் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அணு ஆயுதத்தை சுமந்தபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று சோதித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘ஷாஹீன் -3’ என்ற இந்த ஏவு கணை 2,750 கி.மீ., தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை இந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியுள்ளது. இதனால் இந்த பரிசோதனை முழு வெற்றி அடைந்துள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் கடந்த புதன்கிழமை அந்நாட்டு வெளியு றுவு அமைச்சர் சர்தாஜ் அஜிஸை சந்தித்து இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு நடத்தினார். அப்போது இந்தியா பாகிஸ்தான் இடையே தடைப்பட்ட அமைதி பேச்சுவார்த் தையை மீண்டும் தொடங்கப் போவதாக இருவரும் கூட்டாக அறிவித்திருந்தனர். இந்த நிலை யில், கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனை யில் பாகிஸ்தான் ஈடுபட்டதால், அமைதி பேச்சுவார்த்தை விவகா ரத்தில் பெரும் பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago