கடந்த வருடம் கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கும் நியூயார்க்

By செய்திப்பிரிவு

நியூயார்க்கில் கடந்த ஆண்டு கரோனா காரணமாக மரணமடைந்தவர்களின் உடல்கள்,குளிர்சாதன டிரக்குகளில் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து நியூயார் சிட்டி போலீஸர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “ கடந்த வருடம், கரோனாவால் பலியான சுமார் 750 உடல்கள் இன்னமும் குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் விரைவில் இந்த எண்ணிக்கையை குறைக்க இருக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் பேசி வருகிறோம். இறந்தவர்களின் உடல்கள் ஹார்ட் தீவுப் பகுதியில் புதைக்கப்பட குடும்பத்தினர் விரும்பினால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தனர்.

கடந்த வருடம் கரோனா முதல் அலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதனால் அங்கு பலியானவர்களை அவசரமாக புதைக்காமல், அவர்களது உடல்கள் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்திட அரசு முடிவு செய்தது.

நிலைமை சீரான பிறகு இறந்தவர்களின் குடும்பத்தினர் விருப்பத்துடன் அவர்களது உடல்கள் அடக்க செய்யப்படும் என்றும் நியூயார்க் நகர நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் கடந்த வருடம் கரோனா அதிவேகமாக பரவியது. இதன் விளைவாக ஒரு நாளைக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

இந்த நிலையில் ஜோ பைடன் பதவியேற்றது முதலே அங்கு தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக அமெரிக்காவில் கரோனா பரவல் குறைந்தது.

அமெரிக்காவில் இதுவரை 3.3 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

2 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்