கியூபாவுடனான உறவை புதுப்பித்துக்கொள்ள மட்டுமே அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்கப்படுவதாகவும் மாறாக அவர் தங்களது உள்நாட்டு விவகாரங்களில் குறுக்கிட்டு இடையூறு செய்ய வேண்டாம் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கியூபா வெளியுறவுத் துறையின் அமைச்சர் ஜோஸ்ஃபினா விடல் பேசும்போது, "கியூபாவுக்கு வர அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவெடுத்தால் அவரை வரவேற்க எங்கள் நாடு தயாராகவே உள்ளது. உறவை புதுப்பிக்கும் நோக்கத்தோடு அந்தப் பயணம் இருந்தால் அவரை நாங்கள் என்றுமே வரவேற்போம்.
ஆனால் அவர் எங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு இடையூறு செய்யாமல் இருப்பது நல்லது." என்றார்.
சமீபத்தில் தனியார் செய்தி ஊடகத்துக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தான் விரைவில் கியூபா செல்ல உள்ளதாகவும். அந்தப் பயணத்தின் மூலம் தாம் பெரிய அரசியல் எதிர்ப்பார்ப்புகளை கொண்டுள்ளதாகவும் கியூபாவின் அரசை புதிய திசையில் கொண்டு செல்ல ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago