இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்க அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கரோனா 2-வது அலை உலுக்கி எடுத்துவருகிறது. நாள்தோறும் 3.50 லட்சம் பேருக்கு அதிகமாக கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணிநரேத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர், 3500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல், ஐசியு வசதி கிடைக்காமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் மக்கள் திண்டாடுகிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை அமெரிக்கஅரசு நேற்று வெளியிட்டுள்ளது. லெவல்-4 எச்சரிக்கை என்பது அமெரிக்க மக்கள் பயணம் குறித்த உச்ச கட்ட எச்சரிக்கையாகும்.
இதுகுறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருவதால், அமெரிக்க மக்கள் யாரும் இந்தியாவுக்கு பயணிக்க வேண்டாம். இந்தியாவிலிருந்து வெளியேற நினைக்கும் அமெரிக்க மக்களும் வெளிேயறுங்கள்” என எச்சரித்துள்ளது.
கடந்த மாதம் 28-ம் தேதி அமெரிக்க அரசு வெளியிட்ட எச்சரிக்கையில், அமெரிக்காவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இந்தியாவில் பணியாற்றும்போது அவர்கள் குடும்பத்துடன் வெளிேயற வாய்ப்பளித்தது.
அமெரிக்க அரசு நேற்று வெளியி்ட்ட அறிவிப்பில், இந்தியாவில் பணியாற்றமும் அவசரகால அமெரிக்க அரசு ஊழியர்களும் இந்தியாவிலிருந்து வெளியேறலாம்” எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கடந்த வாரம் லெவல்-4 வகை எச்சரிக்கையை இந்தியாவுக்கு அனுப்பியது. இதன்படி இந்தியாவில் மிகவும் மோசமான, ஆபத்தான கரோனா வைரஸ் பரவல் இருப்பதால், யாரும் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago