தாய்லாந்தில் அதிகரிக்கும் கரோனா

By செய்திப்பிரிவு

தாய்லாந்தில் கடந்த ஒரு மாதமாகவே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, கரோனா பரவலைத் தடுக்க தாய்லாந்து அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து தாய்லாந்து சுகாதாரத் துறை தரப்பில், “தாய்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,112 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தாய்லாந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 15 பேர் பலியாகி உள்ளனர்.

30,000க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல் அலை பாதிப்பைவிட இரண்டாவது அலையின் பாதிப்பு தீவிரமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாய்லாந்து மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

31 mins ago

உலகம்

5 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்