வாட்ஸ்ஆப்-க்கு 48 மணி நேரம் தடை: பிரேசில் நீதிமன்றம் உத்தரவு

By ஏஎஃப்பி

பிரசிலில் வாட்ஸ்ஆப் அப்ளிக்கேஷனை 48 மணி நேரத்துக்கு தடை செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல செல்ஃபோன் அப்ளிக்கேஷனான வாட்ஸ்ஆப்-ஐ நாடு முழுவதிலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு தடை செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றமான சா பாலோ நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவியல் புலன்விசாரணைக்கு ஒத்துழைக்கக் கோரி பலமுறை அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்ட போதிலும் அதனை ஏற்க மறுத்து வந்ததால் இந்தத் தடை விதிக்கப்படுவதாக உத்தரவை வழங்கிய நீதிபதி தெரிவித்தார்.

பிரசிலில் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்படுவது முன் எப்போதும் கண்டிராத ஒன்று என்பதால் இந்தத் தடை அந்நாட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குற்றவியல் புலன்விசாரணை நடந்து வருவதால் தடை பிறப்பிக்க காரணமான வழக்கு குறித்து வெளிபடுத்த முடியாது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்