புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊருக்குப் பயணிக்க விடமால் விதிக்கப்படும் தடைகளால் கரோனா தொற்றின் எண்ணிக்கை இந்திய அளவில் அதிகரிக்கவே செய்யும் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த பெரும்பாலான அரசுகள் பயணத் தடைகளை விதிக்கின்றன. ஊரடங்கு மற்றும் மக்களின் பயணங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கரோனா பரவலைச் சிறிதளவு மட்டுமே தடுக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர். இதன் காரணமாக இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ள இந்தியாவிலும் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயணத் தடைகள் கரோனா தொற்றுகளை அதிகரிக்க மட்டுமே செய்யும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வை அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகம் நடத்தியுள்ளது. மும்பையை மையமாக வைத்து மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில், ''கடந்த வருடம் இந்தியாவில் அமலுக்கு வந்த தேசிய அளவிலான ஊரடங்கால் மும்பையிலிருந்து ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தனர். இது ஒருபுறம் இருக்க லட்சக்கணக்கான மக்கள் அவர்கள் தங்கிய பகுதிகளிலேயே சிக்கிக் கொண்டனர். இதன் காரணமாக அவை கரோனா பரவல் இடங்களாக மாறின. புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பயணிக்கவிடாமல் அவர்களை நெருக்கமான பகுதிகளில் நீண்டகாலம் தங்க வைப்பதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது.
இந்தோனேசியா, சீனா, கென்யா, பிலிப்பைனஸ் ஆகிய நாடுகளிலும் இதே நிலைதான் நீடித்தது. அங்கும் தொழிலாளர்களை முடக்கினர். இதில் சீனா மட்டும் தனது பயணத் தடைகளைச் சிறிது காலத்திலேயே நீக்கியது. மற்ற நாடுகள் பயணத் தடைகளை நீட்டித்தன. இதன் காரணமாக சீனாவில் கரோனா தொற்று வேகமாகவே குறைந்தது.
எனவே தங்கள் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நெருக்கமான இடங்களில் நீண்ட காலம் தங்கவிடாமல் அவர்களது சொந்த ஊருக்குப் பயணிக்க விடுவதன் மூலம் கரோனா தொற்றின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். மேலும், அவர்களை மன அழுத்தத்திலிருந்தும் காக்கலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago