பிரேசிலில் கரோனா பலி 3,95,022 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பிரேசிலில் கரோனா பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த சில மாதங்களாகவே கரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 3,086 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை 3,95,022 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் இதுவரை 12% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் , பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்