கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசிகளைப் பரிந்துரை செய்த அமெரிக்கா

By செய்திப்பிரிவு

கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு தரப்பில், “கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் பரிந்துரை செய்துள்ளது. 35,000 பெண்களுக்கு மாடர்னா மற்றும் பைஸர் கரோனா தடுப்பூசிகளைப் பரிசோதனை செய்தத்தில் கருக்கலைப்பு, குறை பிரசவம் போன்ற எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு என்ன மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்பட்டதோ அதே பக்கவிளைவுகள்தான் அப்பெண்களுக்கும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த அமெரிக்காவில் இதுவரை 39% மக்கள் கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கரோனா தொற்றும், இறப்பும் பெருமளவு குறைந்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில்தான் கரோனா தடுப்பு மருந்து அதிகம் செலுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

3 days ago

மேலும்