பிரான்ஸ் தேர்தலில் இனவாத கட்சி முன்னிலை

By ஏஎஃப்பி

பிரான்ஸ் மாகாண தேர்தலில் இனவாத கட்சியான தேசிய முன்னணி முன்னிலை பெற்றுள்ளது.

பிரான்ஸில் 13 மாகாண சபை களின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக் கும் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் தற்போதைய ஆளும் கட்சியான சோஷலிச கட்சியும் எதிர்க்கட்சியான யு.எம்.பி. ஆகியவை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

இனவாத கட்சி என்று சித்தரிக் கப்படும் தேசிய முன்னணி முன்னிலை பெற்றுள்ளது. இப்போதைய நிலவரப்படி 6 மாகாணங்களை அந்த கட்சி கைப்பற்றியுள்ளது.

அடுத்த கட்டத் தேர்தல் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. அந்தத் தேர்தலிலும் தேசிய முன்ன ணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

கடந்த நவம்பர் 13-ம் தேதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் 132 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பிரான்ஸ் மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய முன்னணியின் தலைவர் மேரி லீ பென், அகதிகள், வெளிநாட்டினருக்கு பிரான்ஸில் இடமில்லை என்று பிரச்சாரம் செய்து வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டினரை வெளியேற்றுவோம் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு ஆதர வாக பிரான்ஸ் மக்கள் வாக்களித் திருப்பது ஐரோப்பிய நாடுகளில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப் படுகிறது. மேரி லீ பென்னின் மருமகள் மேரிசால் லீ பென் கட்சி யின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார். இருவரும் இணைந்தே கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.

தேசிய முன்னணியின் செல்வாக்கை முறியடிக்க தற்போதைய ஆளும் கட்சி அதிபர் ஹோலாந்தேவும் முன்னாள் அதிபரும் யு.எம்.பி. கட்சியின் தலைவரும் நிக்கோலஸ் சர்கோஸியும் புதிய வியூகங்களை வகுத்து வருவதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித் துள்ளன. அவற்றை எதிர்கொள்ள தயார் என்று தேசிய முன்னணி தலைவர் மேரி லீ பென் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

இந்தத் தேர்தல் பிரான்ஸின் தேசிய அரசியலில் இப்போதைக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் வரும் 2017-ல் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மாகாண தேர்தல் முடிவு எதிரொலிக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்