ஜெர்மனியில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸுக்கு எதிராக ஜெர்மனியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.

ஜெர்மனியில் கரோனா மூன்றாம் அலை நிலவுகிறது. இதன் காரணமாக தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்க நடுவண் அரசு முடிவு செய்தது. ஆனால், 16 மாகாண அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் நாடாளுமன்றத்தை அணுகினார். இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனி மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதி, சுதந்திரம், அதிகாரத்துக்கு இங்கு இடமில்லை என்று கோஷமிட்டனர். இதில் 150 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் தடுப்பூசி செலுத்துவதில் ஜெர்மனி அரசு மெத்தனம் காட்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன.

பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்