கரோனா தொற்று அதிகமாகப் பரவுவதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே தனது இந்தியப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கரோனா இரண்டாவது அலை தீவிரத்தை அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய அரசு விதித்து வருகிறது.
கரோனா பரவல் தீவிரமாக உள்ளதைத் தொடர்ந்து தனது இந்தியப் பயணத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்தார். இந்த நிலையில் இம்மாத இறுதியில் இந்தியா வர இருந்த ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே, தனது பயணத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளதாக அவரது அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யோஷிஹிடேவின் பிலிப்பைன்ஸ் பயணமும் கரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டோக்கியோ, ஒசாகா ஆகிய நகரங்களில் மட்டும் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது. நாட்டின் மற்ற இடங்களில் கரோனா கட்டுக்குள் உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
12 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago