16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போட அனுமதி: அமெரிக்கா

By செய்திப்பிரிவு

16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்படுவர் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தரப்பில், “அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தத் தகுதியுடைவர்கள். கரோனாவால் அனைத்து வயதினரும் தீவிரமாக பாதிக்கப்பட்டு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த அமெரிக்காவில் இதுவரை 38% மக்கள் கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் அமெரிக்காவில் கரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கரோனா தொற்று விகிதம் ஏற்ற, இறக்கத்தைக் கண்டுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில்தான் கரோனா தடுப்பு மருந்து அதிகம் செலுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்