பிரிட்டன் மக்கள் கோடை விடுமுறையை வெளிநாடுகளில் செலவழிக்கலாம்: போக்குவரத்துத் துறை அமைச்சர்

By செய்திப்பிரிவு

பிரிட்டன் மக்கள் தற்போது கோடை கால விடுமுறையை வெளிநாடுகளில் செலவிடுவதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்கை தொலைக்காட்சியில் ஷாப்ஸ் பேசும்போது, “நீங்கள் உங்கள் கோடை விடுமுறையை வெளிநாடுகளில் செலவழிக்க டிக்கெட்டுகளை ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்று கூறமாட்டேன். நீங்கள் உங்கள் விடுமுறையை வெளிநாடுகளில் செலவழிப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். எனினும் மக்களுக்கு கரோனாவின் ஆபத்து குறித்து தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் இதில் எச்சரிக்கையாக இருப்போம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கரோனா பரவுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து பிரிட்டனிலும் கரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது. பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக 5,000க்கும் குறைவானவர்களே கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரிட்டனில் 60% கரோனா தொற்று குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளதன் காரணமாக பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

உலகம் முழுவதும் கரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 13 கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 10 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்