தென்கொரியாவில் படகு விபத்தில் 304 பேர் உயிரிழந்தது தொடர்பாக அப்படகின் கேப்டனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு தென் கொரியாவின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 304 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்கள்.
இவ்விபத்தின்போது, படகில் இருந்து அனைவரும் வெளியேறு மாறு அப்படகின் கேப்டன் லீ ஜியூன் சியோர் (70) உத்தரவிடவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவ் வாறு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், நூற் றுக்கணக்கானவர்கள் உயிர் பிழைத்திருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிர்பிழைத்த மாண வர்கள் கூறும்போது, "பேரிடர் கால வெளியேற்ற உத்தரவை படகு நிர்வாகிகள் பிறப்பிக்க வில்லை. அவர்கள்தான் முதலில் காப்பாற்றப்பட்டார்கள். அதுவரை அந்த உத்தரவைப் பிறப்பிக் காமல், படகிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினர்” எனக் கூறினர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், 304 பேர் உயிரிழந்ததற்கு படகின் கேப்டனின் அணுகுமுறையே காரணம் எனக் கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து படகின் கேப்டன் லீ, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத் தின் தீர்ப்பை உறுதி செய்தது.
“கேப்டன் லீ, வேண்டுமென்றே காட்டிய அலட்சியத்தால் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பயணி களின் உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கூறி, உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
3 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago