உலகிலேயே மகிழ்ச்சியான நாடு எது? முதலிடம் யாருக்கு?- 149 நாடுகளில் இந்தியாவுக்கு எந்த இடம்?

By பிடிஐ

உலகிலேயே மகிழ்ச்சியான நாடு குறித்து 149 நாடுகளில் ஐ.நா. சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 139-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் 3 இடங்களை நார்டிக் நாடுகளான ஃபின்லாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் நாடுகள் பிடித்துள்ளன.

கடந்த 2012்ம் ஆண்டிலிருந்து ஐ.நா.வின் நிலைத்த வளர்ச்சிக்கான தீர்வு குறித்த அமைப்பு சார்பில் மகிழ்ச்சியான நாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டு வருகிறது.

சர்வதேச மகிழ்ச்சிநாள் (மார்ச் 20) இன்று கொண்டாடப்படுவதையடுத்து, தரவரிசையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

149 நாடுகளைக் கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நாட்டு மக்களின் மகிழ்ச்சியான சூழல், ஜிடிபி நிலவரம், சமூகசூழல், ஆதரவு, தனிநபர் சுதந்திரம், ஊழல் ஆகியவை குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு தரவரிசை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களை எப்படி மகிழ்ச்சியாக உணர்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபின்லாந்து மக்கள்

இரு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது, முதலாவதாக கரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அதனால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட பாதிப்பு பற்றியும், இரண்டாவதாக கரோனா பெருந்தொற்றை தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் எவ்வாறு போராடினார்கள் என்பதை மதிப்பிட்டும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

சில நாடுகள் மற்ற நாடுகளைவிட ஏன் சிறப்பாக கரோனா பெருந்தொற்றைக் கையாண்டுள்ளனர் என்பதையும் நாங்கள் ஆய்வில் விளக்க முயன்றுள்ளோம் .

இந்தியாவைப் பொருத்தவரை மக்களிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆய்வு நடத்தினோம். ஆனால், தொலப்பேசி மூலம் பலரும் பதில் அளிக்கவில்லை. கடந்த 2019ம் ஆண்டு பலரும் ஆர்வத்துடன் தொலைபேசியில் பதில் அளித்தார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டும் நார்டிக் நாடுகள்தான் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. தொடர்ந்து 4-வது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து டென்மார்க், 3-வதாக ஸ்விட்சர்லாந்தும், 4வதாக ஐஸ்லாந்தும், 5வதாக நெதர்லாந்தும் பிடித்துள்ளன. 6-வது இடத்தில் நார்வே, 7-வது இடத்தில் ஸ்வீடன், 8-வது இடத்தில் லக்ஸம்பர்க், 9வது இடத்தில் நியூஸிலாந்து, 10-வது இடத்தில் ஆஸ்திரியாவும் பிடித்துள்ளன.

நியூஸிலாந்து பிரதமர் அட்ரென்

11-வது இடத்தை ஆஸ்திரேலியாவும் 12-வது இடத்தை இஸ்ரேலும் பிடித்துள்ளன.
உலகின் பணக்கார நாடான அமெரி்க்கா 19-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடான கனடா 14-வது இடத்தில் உள்ளது.

பிரிட்டன் 13-வது இடத்திலிருந்து 17-வது இடத்துக்கு பின்தங்கியது. 13-வது இடத்தில் ஜெர்மனியும், 15-வது இடத்தில் அயர்லாந்தும் 16-வது இடத்தில் கோஸ்டா ரிகாவும், 17-வது இடத்தில் பெல்ஜியமும், 18-வது இடத்தில் செக் குடியரசும், 20-வது இடத்தில் பெல்ஜியமும் இடம் பெற்றுள்ளன.

பிரான்ஸ் 21-வது இடத்திலும்,22-வது இடத்தில் பஹ்ரைனும், 23-வது இடத்தில் மால்டா, 24-வது இடத்தில் தைவான், 25-வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் நாடும் உள்ளன.

சீன அதிபர் ஜி ஜிங்பிங்

கடந்த ஆண்டு சீனா 94-வது இடத்தில் இருந்த நிலையில் வியக்கத்தக்க வகையில் 84-வதுஇடத்துக்கு உயர்ந்துள்ளது. ஆசியா குறித்து ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்தபோது, சீனா கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த தீவிரமான முயற்சிகள், எதிர்மறையான பொருளாதார பாதிப்புகள் வருவதைக் குறைத்தல் போன்றவற்றைசிறப்பாகச்செய்ததால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆசியா-பிசிபிக் கண்டத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா 12வதுஇடத்திலும், நியூஸிலாந்து 9-வதுஇடத்திலும் உள்ளன. அரசு எடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டதால், மகிழ்ச்சி அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

149 நாடுகளில் இந்தியா 139-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா 140 வது இடத்தில் இருந்தது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 105வது இடத்திலும், வங்கதேசம் 101-வது இடத்திலும், இலங்கை 129-வது இடத்திலும் சீனா 84-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளன.

ஜிம்பாப்வே 148வது இடம், ருவாண்டா 147, போட்ஸ்வானா 146, லிசோதா 145-வது இடத்திலும் உள்ளன. ஏமன் 141-வது இடத்திலும், தான்சானியா 142 இடத்திலும் உள்ளன. மிகவும் மோசமாக ஆப்கானிஸ்தான் பட்டியலில் கடைசியாக 149-வது இடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்