ரஷ்யாவில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இதுகுறித்து ரஷ்ய நோய்த்தடுப்பு மையம் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் 9,270 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 459 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த சில நாட்களாகவே 10,000க்கும் கீழே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் 43 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ரஷ்யாவில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
டிசம்பர் மற்றும் ஜனவரியை ஒப்பிடுகையில் ரஷ்யாவில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
» காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் எவை?- பட்டியல் வெளியீடு
» மாசி கடைசி வெள்ளியில் அம்பிகையின் தரிசனம்; ராகுகாலத்தில் துர்கைக்கு எலுமிச்சை தீபம்
சுமார் 60% ரஷ்யர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்ள விரும்பவில்லை. காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படுவதால் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொள்ளத் தயங்குகின்றனர் என்று ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.
இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
3 days ago