தன்பாலின உறவாளர்கள் தத்தெடுக்கலாம்: கொலம்பிய நீதிமன்றம் அனுமதி

By ஏஎஃப்பி

தன்பாலின உறவு தம்பதிகளும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என கொலம்பிய அரசியல் சாசன அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கில் 8 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 நீதிபதிகள் தன்பாலின உறவு தம்பதிகள் குழந்தையைத் தத்தெடுக்கலாம் எனத் தீர்ப்பளித்துள்ளனர்.

இரு ஆண்கள் சேர்ந்து வாழ்தல், இரு பெண்கள் சேர்ந்து வாழ்தல், பாலின அறுவைச் சிகிச்சை மூலம் வேறுபாலினமாக மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் தத்தெடுக்க விரும்பினால், தத்துக் கொடுக்கும் அமைப்புகள் அதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்புக்கு கொலம்பிய ரோமன் கத்தோலிக்க தேவாலயம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது, குழந்தைகளின் உரிமையை மீறுவதாகும். அண்மையில் தன்பாலின திருமணம் மற்றும் குழந்தையை அவர்கள் தத்தெடுப்பது தொடர்பான வாக் கெடுப்பில் பெரும்பான்மை கொலம்பிய மக்கள் எதிராக வாக்களித்திருந்த நிலையில் இந்த தீர்ப்பு மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என தேவாலயம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

23 hours ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்