பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை அமெரிக்கா அதிபர் ஒபாமா நேரில் பார்வையிட்டு அங்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின்போது பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேவும் உடன் இருந்தார்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐ.நா. சார்பில் நடத்தப்படும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா அதிபர் ஒபாமா பாரீஸில் உள்ளார். அங்கு தனது முதல் நிகழ்ச்சியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியைப் பார்வையிட்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிரான்ஸுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை உறுதிபடுத்தும் நிகழ்வாக ஒபாமாவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கருதப்படுகிறது.
தொடர்ந்து அவர் பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது பயங்கரவாதம் உள்ளிட்ட இருநாடுகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago