நியூசிலாந்தில் பனிப்பாறையின் மீது மோதி ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் அதன் விமானி மற்றும் சுற்றுலா பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நியூசிலாந்தின் தெற்கு தீவு என்ற இடத்தில் இருந்து மேற்கு கடற்கரையோரம் பாக்ஸ் மலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதி அந்நாட்டின் பிரபலமான சுற்றுலாதளமாகும். இதனால், ஆண்டுதோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வாடிக்கை. இந்நிலையில், பாக்ஸ் பனிமலையை காண 6 சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டரில் நேற்று புறப்பட்டுச் சென்றனர். அப்போது மோசமான வானிலை காரணமாக, அந்த ஹெலிகாப்டர் பனிபாறையின் மீது மோதி வெடித்து சிதறியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த 6 சுற்றுலா பயணிகள், விமானி உட்பட 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் ஒன்பது சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago