உலகம்

கரோனா மருந்து நிறுவனங்களுடன் பணக்கார நாடுகள் ஒப்பந்தம்; ஏழை நாடுகள் பாதிப்பு: ஐ.நா. எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு மருந்து நிறுவனங்களுடன் பணக்கார நாடுகள் நேரடியாக செய்து கொள்ளும் ஒப்பந்தத்தால் ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படுவது பாதிக்கப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் சபை தரப்பில், “ கரோனா தடுப்பு மருந்தை சேகரித்து வைத்திருப்பதற்காக உலக நாடுகள் மருந்து நிறுவனங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு வாங்குகின்றனர்.

இது கோவாக்ஸ் திட்டத்தை (தேவை உள்ள நாடுகளுக்கு கரோனா தடுப்பு ஊசிகளை விநியோகிக்க கொண்டுச் செல்லப்படும் திட்டமே கோவாக்ஸ். உலக சுகாதார அமைப்பு உருவாக்கிய கோவாக்ஸ் திட்டத்தில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட பல நாடுகள் உள்ளன.) பெரிதும் பாதிக்கின்றது. பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் கோவாஸ் திட்டத்துக்கு ஒத்துழைத்தால் மட்டுமே,. கோவாக்ஸ் திட்டத்தில் உள்ள நாடுகளுக்கே நாங்கள் கரோனா தடுப்பு மருந்துகளை வழங்க முடியும். உங்களிடம் பணம் இருந்தாலும், தடுப்பூசிகளை வாங்க பணத்தை பயன்படுத்த முடியாவிட்டால், பணத்தை வைத்திருப்பது எதையும் குறிக்காது.” என்று தெரிவித்துள்ளது.

தேவை உள்ள நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிக்க கொண்டுச் செல்லப்படும் திட்டமே கோவாக்ஸ். உலக சுகாதார அமைப்பு உருவாக்கிய கோவாக்ஸ் திட்டத்தில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட பல நாடுகள் உள்ளன.

முன்னதாக, சுமார் 130 நாடுகள் ஒரு டோஸ் கரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை. வெறும் 10 நாடுகளுக்கு சுமார் 75% கரோனா தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது நியாயமற்றது. அனைத்து நாடுகளுக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் சென்றடைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT