செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance rover) களமிறக்கப்பட்டுள்ளது.
பெர்சவரன்ஸ் ரோவர் ஜி.எம்.டி நேரப்படி சரியாக நேற்று (பிப்.,18, வியாழக்கிழமை) இரவு 20.55 செவ்வாயில் தரையிறங்கியது. செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பியுள்ளது.
இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் பணியை மேற்கொண்டுள்ளது.
» கரோனா தடுப்பு மருந்தைப் போட மறுத்தால் அபராதம்: இந்தோனேசியா எச்சரிக்கை
» 130 நாடுகள் ஒரு டோஸ் கரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை: ஐ.நா. தகவல்
கடந்த 2012-ம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கிரகத்தின் வேறொரு பள்ளத்தில் நாசா தரையிறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, நாசா தன் பெர்சவரன்ஸ் ரோவரை, ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கியுள்ளது.
பெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடும் என நாசா தெரிவித்துள்ளது.
செவ்வாயின் ஜெசெரோ பகுதியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும், அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த ரோவர் செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தியை நாசா புரொபல்சன் லேபராட்டரி வழிநடத்தும் குழு தலைவர் ஸ்வாதி மோகன் உறுதி செய்தார். ஸ்வாதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோவர் தரையிறங்கியது உறுதியானதும், கலிஃபோர்னியாவில் நாசாவின் திட்டக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த பொறியாளர்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
அதிபர் ஜோ பைடன் வாழ்த்து:
பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கியதை அடுத்து அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில், "நாசா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து. பெர்சிவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கியது ஒரு வரலாற்றுத் தருணம். அனைவரின் கடின உழைப்புமே இந்த வரலாற்றை சாத்தியமாக்கியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் அறிவியல் ஆற்றலால் எதுவும் சாத்தியம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
13 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago