கரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் விசாரணைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறைச் செயலாளர் டோம்னிக் கூறும்போது, “கரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் விசாரணைக்கு சீனா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை உலகம் அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இந்த விளைவுக்கான பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
கரோனா விவகாரத்தில் சீனா உண்மையை மூடி மறைக்கிறது என்று பிரிட்டனும், அமெரிக்காவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
பின்னணி என்ன?
கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறிவந்தது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு இம்மாதத் தொடக்கத்தில் சீனாவுக்குச் சென்று வூஹான் சந்தையில் ஆய்வு நடத்தியது. மேலும், முதலில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட மருத்துவமனைகளிலும் இக்குழு ஆய்வு செய்தது. இதன் முடிவில் வூஹான் ஆய்வுக்கூடத்தில் கரோனா வைரஸ் பரவியதற்குச் சாத்தியங்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
சீனாவில் இருந்து பரவியதாகக் கருதப்படும் கரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
3 days ago