மார்ச் 1 -ம் தேதி முதல் ஜெர்மனியில் கரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் செய்ய திட்டமிட்டிருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ ஜெர்மனியில் கரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் மார்ச் மாதம் முதல் பொது மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை இலவசமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கரோனா வைரஸ் குறைந்துள்ளது. எனினும் புதிய வகை கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மார்ச் 14 -ம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது.
மாகாண ஆளுநர்களுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago