ரகசியமாக கரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்ட புகார்: பெரு வெளியுறவுத் துறை அமைச்சர் ராஜினாமா

By செய்திப்பிரிவு

பெருவில் கரோனா தடுப்பூசி தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ராஜினாமா செய்திருக்கிறார்.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ தென் அமெரிக்க நாடுகளில் கரோனாவினால் அதிகப்படியான பாதிப்பை சந்தித்த நாடுகளில் பெருவும் ஒன்று. இந்த நிலையில் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் பெருவில் கரோனா தடுப்பு மருந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்படு வருகிறது.

இந்த நிலையில் பயன்பாட்டுக்கு முன்னரே பெருவின் அரசியல் தலைவர்கள் சிலர் ரகசியமாக கரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்தால் பெருவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எலிசபெத் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதனை பெரு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து எலிசபெத் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இது தவறான செயல். நான் இரண்டாவது டோஸை எடுத்து கொள்ள போவதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

15 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்