தென்கொரியாவில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பு மருந்து பொது மக்களுக்கு செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து தென்கொரியா சுகாதாரத் துறை தரப்பில், “ தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக 400க்குள்ளாகவே கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. வணிக நோக்கத்திற்காக கரோனா கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பு மருந்து பொது மக்களுக்கு செலுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.
தென் கொரியாவில் முதியவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது.
பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவே உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் 44 நாடுகளிலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் 15 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.
» பட்ஜெட் கூட்டத்தொடர்: மக்களவை முதல் அமர்வில் 100 சதவீத செயல்திறனை எட்டியது
» செய்யாததைச் செய்ததாகக் கூறி மக்களை ஏமாற்றும் முதல்வர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
மேலும், பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பரவும் கரோனா வைரஸ் விரைவாக உருமாற்றம் அடைவதால் அவை உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உலக நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் பலரும் எச்சரிக்கை விடுத்தனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago