ஆங் சாங் சூச்சிக்கு புதன்கிழமை வரை வீட்டுக்காவல் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு


மியான்மர் நாட்டின் தலைமை ஆலோசகர் ஆங் சாங் சூச்சி புதன்கிழமை வரையும் வீட்டு சிறையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூச்சியின் வழக்கறிஞர் சூச்சி திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார் என்று தெரிவித்திருந்தார், இந்த நிலையில் சூச்சி இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கபடவிவில்லை என்றும் அவர் புதன்கிழமை விடுவிக்கப்படுவார் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஆன்லைன் வீடியோ மூலமாகவும் ஆங் சாங் சூச்சி தொடர்ந்து உரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. ஆங் சான் சூச்சி, முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்