கரோனா பாதிப்பு காரணமாக இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு சவுதி அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சவுதி அரசாணை அனுப்பி உள்ளது.
இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு சவுதி செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. இப்பட்டியலில் இந்தியா, அர்ஜெண்டினா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, அமெரிக்கா, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, பாகிஸ்தான், பிரேசில், போர்ச்சுக்கல், பிரிட்டன், துருக்கி, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், லெபனான், எகிப்து, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கும்.
சவுதி அரேபியாவில் கரோனா வைரஸால் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
25 mins ago
உலகம்
6 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago